இரண்டு வருடங்களுக்கு முன்பே முடிந்த ‘எந்திரன் 2’?

ஷங்கரின் பிரம்மாண்ட படைப்பாக உருவாகிவரும் ‘எந்திரன் 2’ குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று தற்போது வெளிவந்திருக்கிறது

செய்திகள் 22-Oct-2016 2:48 PM IST Chandru கருத்துக்கள்

ஒரு படம் எடுக்கும்முன்பு அதற்கான ஸ்டோரி போர்டு வேலைகளை திட்டமிட்டுச் செய்து, அதன்பின்பே படப்பிடிப்பிற்குச் செல்வதை ஹாலிவுட்டில் வழக்கமாக வைத்திருப்பார்கள். இங்கேயும் எஸ்.எஸ்.ராஜமௌலி, ஷங்கரைப் போன்ற ஒருசில இயக்குனர்கள் அந்த பாணியிலேயே படமெடுக்கிறார்கள். ஷங்கர் தற்போது இயக்கிவரும் ‘எந்திரன் 2’வுக்காக இன்னும் ஒருபடி மேலே போய், படப்பிடிப்பு செல்வதற்கு முன்பே முழுபடத்தையும் 3டி அனிமேஷனில் உருவாக்கிவிட்டு, அதன்பிறகே படப்பைத் துவங்கினார் என அவருக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட 2 மணி 20 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த 3டி எந்திரன் 2வை இரண்டு வருடங்களுக்கு முன்பே ஷங்கர் முடித்துவிட்டாராம். அதனை முன்மாதிரியாக வைத்தே இப்போது ரஜினியை வைத்து முழுப்படத்தையும் ஷூட் செய்து வருகிறாராம் ஷங்கர். தற்போது 60% படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்திருக்கிறதாம்.

வரும் நவம்பர் 20ஆம் தேதி ‘எந்திரன் 2’வின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடவிருக்கிறார்கள். 2017 தீபாவளியை முன்னிட்டு ‘எந்திரன் 2’ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#Rajinikanth #Enthiran2.0 #Shankar #AmyJackson #ARRahman #AkshayKumar #LycaProduction #Superstar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;