‘திரைக்கு வராத கதை’ ஆபாசப் படம் இல்லை! – இயக்குனர் விளக்கம்

‘திரைக்கு வராத கதை’ லெஸ்பியன் கதை இல்லை! இயக்குனர் விளக்கம்!

செய்திகள் 22-Oct-2016 2:42 PM IST VRC கருத்துக்கள்

நதியா, இனியா, கோவை சரளா, ஆர்த்தி என முழுக்க முழுக்க பெண்களே நடித்துள்ள படம் ‘திரைக்கு வராத கதை’. தமிழில் ‘வீட்டை பார் நாட்டை பார்’ மற்றும் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் உட்பட பல முன்னணி நடிகர்களை நடிக்க வைத்து 30 படங்களுக்கும் மேல் இயக்கியுள்ள துளசிதாஸ் ‘திரைக்கு வராத கதை’ படத்தை தமிழில் இயக்கியியுள்ளார். தீபாவளி ரிலீசாக வெளிவரவிருக்கும் ‘திரைக்கு வராத கதை’ படம் குறித்து சில வதந்திகள் வெளியாகின. அதாவது இப்படம் லெஸ்பியன் உறவை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது என்றும், சென்சாருக்கு சென்ற இப்படத்தில் ஆபாசமான நிறைய காட்சிகளை நீக்கி விட்டு தான் படத்திற்கு சென்சார் குழு உறுப்பினர்கள் கு ‘U/A’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள் என்றும் வதந்திகள் வெளியாகின. இதனால் ‘திரைக்கு வராத கதை’ படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்க படத்தின் இயக்குன்ர் துளசிதாஸ், தயாரிப்பாளர் மணிகண்டன் ஆகியோர் நேற்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இயக்குனர் துளசிதாஸ் பேசும்போது,

‘‘இந்த படத்தில் சென்சார் குழு உறுப்பினர்கள் இரண்டே இரண்டு காட்சிகளை மட்டும் தான் நீக்கச் சொன்னார்கள். ஒன்று ஊசி போடுவது மாதிரி வரும் ஒரு காட்சி! இன்னொறு அந்த ஊசி மருந்தின் பெயரை! இது லெஸ்பியன் பற்றிய படம் அல்ல. குடும்பத்துடன் வந்து பார்க்க கூடிய ஜனரஞ்சக படம். ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் மீது அன்பு வரலாம். அது அதீதமான அன்பாக கூட இருக்கலாம். இதுபோன்ற காட்சிகள் தான் படத்தில் உள்ளன. மாறாக லெஸ்பியன் படம் மாதிரியான காட்சிகள் எதுவும் கிடையாது. இப்படத்திற்கு ‘U/A’ சர்டிஃபிக்கெட் கொடுத்திருக்கிறார்கள் என்றால் அது படத்தில் ஹாரர் காட்சிகள் இருப்பதால் தான்! இப்படத்தில் எல்லோருக்குமாக நல்ல ஒரு மெசேஜை சொல்லியிருக்கிறேன். எனக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது. கேரள அரசு விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளவன் நான். நான் சமூகத்திற்கு எதிரான கருத்துக்களை கொண்ட படங்களி எடுக்க மாட்டேன். அதை நீங்கள் படத்தை பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள்’’ என்றார்.

‘எம்.ஜே.புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் மணிகண்டன் தயாரித்துள்ள இப்படம் நூறுக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது என்பதை தயாரிப்பாளர் தெரிவித்தார்.

#ThiraikkuVarathaKathai #PTSelvakumar #Nadhiya #Iniya #Aarthi #MJ Productions #Manikandan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கண்ணாடி ட்ரைலர்


;