ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் காமெடி கேரக்டர்களில் நடிக்க துவங்கியுள்ள வடிவேலு சமீபத்தில் நடித்து முடித்துள்ள படம் ‘கத்திசண்டை’. சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா இணைந்து நடித்துள்ள இப்படத்தில் காமெடி நடிகர் சூரியுடன் வடிவேலுவும் ஒரு காமெடி வேடமேற்று நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து ‘தில்லுக்கு துட்டு’ படத்தை இயக்கிய ராம்பாலா இயக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்திலும் நடிக்கிறார் வடிவேலு. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் வடிவேலு நடிக்கவிருப்பதை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். . ‘ஸ்டீவ்ஸ் கார்னர்’ நிறுவனம் சார்பில் ஸ்டீஃபன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்துகொள்ளவிருக்கிறார் வடிவேலு.
#Vadivelu #GVPrakashKumar #Rambala #Vishal #KaththiSandai #Soori #Suraaj #DhillukkuDhuttu #Santhanam
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கி...
நடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...