நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி பரிசு!

நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி பரிசு!

செய்திகள் 22-Oct-2016 11:49 AM IST VRC கருத்துக்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த ஆண்டு புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்றதில் இருந்து சங்க உறுப்பினர்களுக்கு பல்வேறு நல உதவிகளை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் சங்கம் சார்பில் தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. அதைப் போல இந்த ஆண்டும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடும் விதமாக அனைத்து உறுப்பினர்களுக்கும் துணிமணிகள் மற்றும் இனிப்பு வகைகள் வழங்கப்படுகிறது. வெளியூரில் இருக்கும் சங்க உறுப்பினர்களுக்கு சங்கத்தின் துணை தலைவர் பொன்வண்ணன் தலைமையில் செயற்குழு உறுப்பினர்களான ஸ்ரீமன், உதயா, ஹேமச்சந்திரன், எம்.ஏ.பிரகாஷ் ஆகியோர் மேற்பார்வையில் பரிசுகள் நேற்று அனுப்பிவைக்கப்பட்டது. சென்னையில் உள்ள சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நாளை 11 மணி அளவில் நடிகர் சங்க வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெறவிருக்க்கும் இந்நிகழ்ச்சியில் மூத்த நடிகர்கள் நடிகைகள் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

#NadigarSangam #Vishal #Naaser #Karthi #Ponvannan #Karunaas #Sriman #Udhaya #KovaiSarala

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;