திரையுலக மார்க்கண்டேயனை கௌரவப்படுத்தும் சூர்யா, கார்த்தி!

திரையுலக மார்க்கண்டேயனை கௌரவப்படுத்தும் சூர்யா, கார்த்தி!

செய்திகள் 22-Oct-2016 11:25 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு தனி இடைத்தைப் பிடித்து 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சிவகுமார். இவரது 75-வது பிறந்த நாளையொட்டி சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் அவரது மகன்களும் நடிகர்களுமான சூர்யாவும் கார்த்தியும்!

ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் 1965-ஆம் ஆண்டு வெளியான ‘காக்கும் கரங்கள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் சிவகுமார். தொடர்ந்து ‘கந்தன் கருணை’, ‘துணிவே தோழன்’ உட்பட பல படங்களில் நடித்தார். பிறகு கதாநாயகனாக நடிக்க துவங்கினார். ‘அன்னக்கிள்ளி’, ‘ரோசாப்பூ ரவிக்கைகாரி’, ‘வண்டிச்சக்கரம்’, ‘சிந்து பைரவி’, ‘மறுபக்கம்’ உட்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். பழம் பெரும் நடிகர்களான மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ‘காதல் மன்னன்’ என்று அழைக்கப்படும் ஜெமினி கணேசன், மற்றும் முத்துராமன், இன்றைய முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், விஜய், அஜித், சூர்யா உட்பட தமிழ் சினிமாவின் பெரும்பாலான நடிகர்களுடனும் நடித்துள்ளார் சிவகுமார்.

கலைத்துறையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் சிவகுமாருக்கு வருகிற 27-ஆம் தேதி 75 வயது ஆகிறது. இதை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று நினைத்த நடிகர்கள் சூர்யாவும், கார்த்தியும் பலவேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செதுள்ளனர். பல்வேறு திறமைகளை கொண்ட நடிகர் சிவகுமார் ஓவியம் வரைவதிலும் வல்லவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் வரைந்துள்ள பலவேறு ஓவியங்களில் இருந்து சிறந்தவையை தேர்ந்தெடுத்து ஓவியக் கண்காட்சி ஒன்றும் நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சி வருகிற 24-ஆம் துவங்கி 26-ஆம் தேதி வரை 3 நாட்கள் சென்னையிலுள்ள லலித் கலா அகாடமியில் நடக்கிறது. பிறந்த நாளான 27-ஆம் தேதி வைர விழா மலர் ஒன்று வெளியிடப்படுகிறாது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட சிவகுமாருடன் நடித்தவர்களின் அனுபவங்கள் இடம் பெறுகிறது. சிவகுமார் நடித்த பல்வேறு படங்களின் குறிப்புகள் மற்றும் புகைப்படங்களும் இந்த மலரில் இடம் பெறுகிது. இது தவிர நடிகர் சிவகுமாரின் சொற்பொழிவுகள் அடங்கிய பல்வேறு டிவிடிக்களும் பிறந்த நாளன்று வெளியிடப்படவிருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகளில் திரையுலகை சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

#Sivakumar #Suriya #Karthi #Jyothika #KaakumKarangal #Kandhankarunai #Rajinikanth #KamalHaasan #Ajith

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;