‘ராஜகுமாரா’வில் சரத்குமார், பிரியா ஆனந்த்

சரத்குமார், பிரியா ஆனந்த் இணையும் ராஜகுமாரா!

செய்திகள் 21-Oct-2016 4:13 PM IST VRC கருத்துக்கள்

‘சண்டமாருதம்’ படத்தை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார் சரத்குமார். ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்கும் ‘அடங்காதே’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் சரத்குமார் ஒரு கன்னட படத்திலும் தற்போது நடித்து வருகிறார். கன்னட பட உலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான புனீத் ராஜ்குமார் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ராஜகுமாரா’. இப்படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க, அவருடன் பிரியா ஆனந்தும் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கு முன்பும் சரத்குமார் சில கன்னட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Rajkumara #Sarathkumar #Sandamarutham #GVPrakash #Adangathey #PuneetRajkumar #PriyaAnand

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;