‘சாயா’வில் அதிரடி போலீஸ் அதிகாரியாக சோனியா அகர்வால்!

கல்வியின் அவசியத்தை உணர்த்தும்  படம் ‘சாயா’

செய்திகள் 21-Oct-2016 2:47 PM IST VRC கருத்துக்கள்

‘‘பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதையை கொண்ட படம் என்றால் அதில் பயமுறுத்துவது போலத்தான் இருக்கும். ஆனால் முதன் முதலாக பெற்றோர்களும். குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படமாக ஆத்மாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ‘சாயா’. அதே சமயம் இந்த படம் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது’’ என்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் வி.எஸ்.பழனிவேல். இவரே இப்படத்தின் கதை பாடல்கள், பின்னணி இசையையும் கவனித்திருக்கிறார்.

இப்பட்த்தில் ஒய்.ஜி.மகேந்திரன் ஆத்மாவின் தந்தையாகவும், பாய்ஸ் ராஜன் தலைமையாசிரியராகவும் நடித்திருக்கிறார்கள். பஞ்சாயத்துகாரர்களாக ஆர்.சுந்தர்ராஜனும், பயில்வான் ரங்கநாதனும் நடித்துள்ளனர். இவர்க்ளுடன் நெல்லை சிவா, மனோகர், கராத்தே ராஜா, பாலாசிங், மூகாம்பிகை ரவி ஆகியோரும் நடித்துள்ளனர். கதாநாயகனாக சந்தோஷ் கண்ணா நடிக்க, கதாநாயகியாக ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தில் நடித்த காயத்ரி நடித்துள்ளார். அதிரடி போலீஸ் அதிகாரியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார்.

‘அம்மா அப்பா சினி பிக்சர்ஸ்’ சார்பில் இப்படத்தை வி.எஸ்.சசிகலா பழனிவேல் தயாரித்து வெளியிடுகிறார். இப்படத்திற்கு ஜான் பீட்டர் (பாடல்கள்) இசை அமைத்திருக்கிறார். குழந்தைகளை கவரும் விதமாக நிறைய கிராஃபிக்ஸ் காட்சிகள் இடம் பெற செய்துள்ள இப்படத்தை அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள் படக்குழுவினர்.

#Saaya #SoniaAgarwal #VSPazhanivel #Aathma #YGeeMahendiran #BoysRajan #NellaiSiva

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆதித்ய வர்மா டீஸர்


;