இரண்டு மாதங்களுக்கு முன்பு 5க்கும் மேற்பட்ட பெரிய படங்கள் தீபாவளி வெளியீடாக வெளிவரும் என்று செய்திகள் வந்துகொண்டிருந்த சூழ்நிலையில், நேரம் நெருங்க நெருங்க கொடி மற்றும் காஷ்மோரா படங்கள் மட்டுமே தீபாவளி ரிலீஸை உறுதி செய்தன. இந்நிலையில், நேற்று இந்த படங்களின் சென்சார் ரிசல்ட்டும் வெளிவந்துவிட்டதால் அக்டோபர் 28ஆம் தேதி இரண்டு படங்களுமே உலகமெங்கும் ரிலீஸ் செய்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இரண்டு படங்களின் புரமோஷன் பணிகள் தற்போது சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன.
இரண்டு படத்தரப்பினருக்கும் உற்சாகம் தருவதுபோன்ற சாதனை ஒன்றும் தற்போது நிகழ்ந்திருக்கிறது. ஆம்... அக்டோபர் 5ஆம் தேதி வெளியான ‘கொடி’ படத்தின் டிரைலருக்கு 40 லட்சம் பார்வையிடல்களும், அக்டோபர் 7ஆம் தேதி வெளியான ‘காஷ்மோரா’ டிரைலருக்கு 50 லட்சம் பார்வையிடல்களும் கிடைத்துள்ளன. இதில் கார்த்தி பட டிரைலர் ஒன்று முதல்முறையாக 50 லட்சத்தை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
#Kodi #Kaashmora #Dhanush #Karthi #Trisha #Nayanthara #Gokul #DuraiSenthilkumar #DreamWarriorPictures
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனமும் ‘விவேகானந்தா...
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’....