விஜய்சேதுபதியுடன் இணையும் த்ரிஷா!

’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட ஒளிப்பதிவாளர் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா!

செய்திகள் 21-Oct-2016 12:57 PM IST VRC கருத்துக்கள்

தென்னிந்திய சினிமாவில் கடந்த 14 ஆண்டுகளாக முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்து வரும் த்ரிஷா இதுவரை விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்ததில்லை. அந்த குறை பிரேம் குமார் இயக்கும் படத்தின் மூலம் தீர்ந்துவிடப் போகிறது. விஜய்சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் பிரேம் குமார். இவர் விஜய்சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடி த்ரிஷா தான்! தற்போது ஆர்.மாதேஷ் இயக்கத்தில் ‘மோகினி’ படத்தில் நடித்து வரும் த்ரிஷா, அடுத்து ‘சதுரங்கவேட்டை-2’வில் அரவிந்த்சாமியுடன் நடிக்கவிருக்கிறார். இந்த படங்களுடன் இன்னும் பெயரிடப்படாத விஜய்சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிலும் கலந்துகொள்ள இருக்கிரார் த்ரிஷா!

#VijaySethupathi #Trisha #PremKumar #NaduvulaKonjamPakkathaKaanom #SathurangaVettai2 #Kodi #Nayagi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;