‘திட்டக்குடி’ இயக்குனரின் அடுத்த படம்?

மகேந்திரன் நடிக்கும் ரங்கராட்டினம்!

செய்திகள் 21-Oct-2016 11:19 AM IST VRC கருத்துக்கள்

‘திட்டக்குட்டி’ படத்தை இயக்கிய சுந்தரன் இயக்கி வரும் படம் ‘ரங்கராட்டினம்’ இப்படத்தில் மகேந்திரன் கதாநாயகனாகவும், ஷில்பா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ‘நான் கடவுள்’ ரஜேந்திரன், முனைவர் கு.ஞானசம்பந்தன், சென்ட்ராயன், வினோதினி, ‘பசங்க’ சிவகுமார், தவசி ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படம் குறித்து இயக்குனர் சுந்தரன் கூறும்போது,

‘‘ராட்டினம் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சந்தோஷப்படுத்தும் ஒரு விளையாட்டு சாதம்! ரங்கராட்டினம் எனப்து அதிகபடியான சந்தோஷத்தை தரக்கூடியதாகும். சேட்டையும், குறும்பும் நிறைந்த ஒரு பையன் அடக்கமும் அமைதியும் கொண்ட ஒரு பெண்ணை பார்த்து ஒரு தலையாக காதலிக்கிறான். ஒரு கட்டத்தில் அந்த பெண் இவனை விட பயங்கர சேட்டை மற்றும் குறும்புக்காரப் பெண் என்று தெரிந்தவுடன் அவளை விட்டு விலக நினைக்கிறான். ஆனால் அவளோ அவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். இறுதியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா? என்பதை நகைச்சுவையாக சொல்லும் படமே ரங்கராட்டினம்’’ என்றார்.

திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் படமாகியுள்ள இப்படத்திற்கு செல்வநம்பி இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை ராமசாமி கவனித்துள்ளார். படத்தொகுப்பை விஷால் வி.எஸ். செய்கிறார். இப்படத்தை ‘காயத்ரி பிக்சர்ஸ்’ சார்பில் ஜி.ராமசாமி தயாரித்துள்ளார். இறுதிகட்ட பணிகள் நடந்துவரும் இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

#Rangaraatinam #Mahendiran #Rajendiran #Shilpa #Sundaran #Thittakudi #Selvanambi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காளி முதல் 7 நிமிடங்கள்


;