படப்பிடிப்பு முடிந்த கையோடு வியாபாரத்தையும் முடித்த 'சென்னை 28 - 2' டீம்!

சேவாக்கின் பிறந்த நாளன்று படப்பிடிப்பை நிறைவு செய்தனர் 'சென்னை 28 - 2' படக்குழுவினர்

செய்திகள் 21-Oct-2016 10:27 AM IST Chandru கருத்துக்கள்

'பிளாக் டிக்கெட் கம்பெனி' சார்பில் வெங்கட் பிரபு தயாரித்து இயக்கி இருக்கும் சென்னை 28 இரண்டாம் பாகத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் தலைமையில் கோலாகலமாக மலேஷியாவில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு பிரபல கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக்கின் பிறந்த நாளான அக்டோபர் 20ஆம் தேதி அன்று நிறைவு செய்துள்ளனர். இப்படத்தை நவம்பர் 10ஆம் தேதி வியாழக்கிழமையன்று உலகமெங்கும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு.

இந்நிலையில் ‘சென்னை 28’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை அபிஷோக் ஃபிலிம்ஸ் ரமேஷ் வாங்கியுள்ளார். பல முன்னணி படங்களுக்கு இந்நிறுவனம்தான் பைனான்ஸ் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#VenkatPrabhu #VirendarSehwag #Chennai600028II #Shiva #Jai #Vaibhav #NithinSathya #YuvanShankarRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயா 2 - ட்ரைலர்


;