மாரி, தங்கமகன், தொடரி என அடுத்தடுத்து தனுஷின் படங்கள் விமர்சனரீதியாக சற்று பின்னடைவைச் சந்தித்தாலும், ‘கொடி’ மூலம் தனது மார்க்கெட்டை உச்சத்தில் பறக்கவிட முடியும் என இந்த தீபாவளிக்கு நம்பிக்கையுடன் களமிறங்குகிறார் தனுஷ். எதிர்நீச்சல், காக்கி சட்டை படங்களைத் தொடர்ந்து ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷிற்கு முதல்முறையாக இரட்டை வேடம் கொடுக்கப்பட்டுள்ளதால் அவரின் ரசிகர்களும் படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன் நாயகிகளாகும் நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பாடல்களும் ஹிட்டாகி உள்ளன.
இந்நிலையில், இப்படத்தை சென்சார் அதிகாரிகள் பார்வையிட்டனர். குடும்பத்துடன் அனைவரும் பார்க்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டிருப்பதாக கருதிய சென்சார் டீம் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கி தீபாவளிக்கு திரைக்கு வர கிரீன் சிக்னல் கொடுத்துள்ளனர். தமிழகமெங்கும் 350க்கும் அதிகமான திரையரங்குகளில் ‘கொடி’ ரீலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Dhanush #Trisha #Anupama #Kodi #DuraiSenthilKumar #EthirNeechal #KaakiSattai #Kaashmora #SriDivya #Karthi #Nayanthara
‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’....
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...