கார்த்தி நடிப்பில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘காஷ்மோரா’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக வருகிற 28-ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் இன்று சென்சார் குழுவினரின் பார்வைக்கு சென்றது. ‘காஷ்மோரா’வை பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு ‘U/A’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் கார்த்தியுடன் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். கோகுல் இயக்கியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ஓம் பிரகாஷ் கவனிக்க, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். கார்த்தி இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம், கார்த்தி ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து ரக ரசிகர்களையும் மகிழ்விக்கும் படமாக இருக்கும் என்பதை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
#Kaashmora #Karthi #Nayanthara #SriDivya #Gokul #SanthoshNarayanan #DreamWarriorPictures #SRPrabhu #SRPrakashBabu #Vivek
சிவகார்த்திகேயனின் ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்த முதல் படம் ‘கனா’. அருண்ராஜா...
நயன்தாரா, சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ள ‘மிஸ்டர் லோக்கல்’ மே 1-ஆம் தேதி வெளியாகிறது....
‘மெட்டி ஒலி’ தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் ‘போஸ்’ வெங்கட்! தொலைக்காட்சி தொடர்களை தொடர்ந்து...