டிசம்பர் ரிலீஸுக்காக பரபரப்பாக இயங்கி வருகிறது கௌதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ படக்குழு. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் மலையாளத்திலிருந்து தமிழுக்கு அறிமுகமாகியுள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் கௌதம் மேனனுடன் இணையவிருக்கிறார் மஞ்சிமா.
கௌதம் இயக்கும் இன்னொரு படமான தனுஷின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்திற்குப் பிறகு நாலு ஹீரோ, மூணு ஹீரோயின் நடிக்கும் நான்கு மொழிப் படம் ஒன்றை கௌதம் மேனன் உருவாக்கவிருக்கிறார் என்றும், ‘ஒன்றாக’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்காக தமிழிலிருந்து ஜெயம் ரவி, மலையாளத்திலிருந்து ப்ருத்விராஜ், தெலுங்கிலிருந்து சாய் சரண்தேஜ், கன்னடத்திலிருந்து புனித் ராஜ்குமார், அதேபோல்... அனுஷ்கா, தமன்னா இருவரும் இப்படத்தின் ஹீரோயின்களாகவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்கள் என்றும், தமிழுக்கான கதாநாயகி வேட்டை தற்போது நடந்து வருவதாகவும் கடந்த ஜூலை மாதம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
தற்போது அந்த நாயகி மஞ்சிமாதான் என்பது அவரது சமீபத்திய பேட்டி ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘முடிசூடா மன்னன்’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் மஞ்சிமா.
#ManjimaMohan #AchchamYenbadhuMadamaiyada #STR #GauthamVasudevMenon #JayamRavi #Prithviraj
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...