பட்டையைக் கிளப்பும் விஜய்யின் ‘பைரவா’ அப்டேட்ஸ்!

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பைரவா’ படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன

செய்திகள் 20-Oct-2016 9:58 AM IST Chandru கருத்துக்கள்

‘அழகிய தமிழ் மகன்’ படத்திற்குப் பிறகு ‘வீரம்’ படத்தின் வசனம் மூலம் கவனம் பெற்ற பரதன் இயக்கத்தில் எனர்ஜிட்டிக்காக உருவாகி வருகிறது விஜய் நடிக்கும் ‘பைரவா’ படம். 2017 பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருக்கும் இப்படம் குறித்த சில லேட்டஸ்ட் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

* கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘பைரவா’ படத்தின் 90% படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து விட்டன. இன்னும் ஒரு சில காட்சிகளும், ஒரே ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு மட்டுமே மீதம் உள்ளனவாம்.

* மொத்தம் இரண்டரை மணி நேர ரன்னிங் டைமில் உருவாகியுள்ள ‘பைரவா’ படத்தின் முதல்பாதி 1 மணி 24 நிமிடங்கள் இருக்குமாம்.

* சந்தோஷ் நாராயணனின் இசையில் ‘பைரவா’ படத்திற்கான 5 பாடல்களையுமே வைரமுத்துதான் எழுதியிருக்கிறார். அதில் ‘பட்டைய கிளப்பு... பட்டைய கிளப்பு பட்டிதொட்டியெல்லாம் பட்டைய கிளப்பு’ என்ற விஜய்க்கான அறிமுகப்பாடலும், ‘மஞ்சள் மேகம்... ஒரு மஞ்சள் மேகம்... சிறு பெண்ணாகி முன்னே போகும். அந்தப் பெண்ணாகி முன்னே போகும்...’ என்ற மெலடி டூயட்டும் இப்போதே விஜய்யின் ஃபேவரைட் பாடலாக அமைந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.

* ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் அசோஷியேட்டாக பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் சுகுமாரனை, இப்போது ‘பைரவா’வுக்கு ஒளிப்பதிவு செய்ய வைத்திருப்பதன் மூலம் மீண்டும் விஜய்யுடன் சுகுமாரை இணைத்துள்ளார் இயக்குனர் பரதன்.

* படத்தில் திருநெல்வேலியும், சென்னையும் சரிவிகிதத்தில் வருவதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம். இதில் திருநெல்வேலி கோயில் ஒன்றை பின்னி மில்லிலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை பிரசாத் ஸ்டுடியோவிலும் செட்டாக அமைத்து அசத்தியிருக்கிறார் ஆர்ட் டைரக்டர் பிராபகர்.

* இதுவரை விஜய் நடித்த எந்தப்படத்திலும் இடம்பெறாத புதிய பிரச்சனை ஒன்றை மையமாக வைத்துதான் இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் பரதன். அந்த பிரச்சனைக்கு அவர் சொல்லியிருக்கும் தீர்வு ரசிகர்களை 100% திருப்பிப்படுத்தும் என்று படக்குழு கூறுகிறது.

* காமெடி, சென்டிமென்ட், லவ், ஃபைட், ஓபனிங் சாங், குத்துப் பாடல் என எல்லாம் கலந்த கலவையாக குடும்பத்துடன் அனைவரும் கண்டுகளிக்கும் வகையில்தான் ‘பைரவா’ உருவாகியுள்ளதாக இயக்குனர் பரதன் குறிப்பிட்டுள்ளார்.

#Bairavaa #Vijay #KeerthiSuresh #VijayaProductions #Bharathan #SanthoshNarayanan #Veeram #Sathish

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;