5வது முறையாக தொடரும் கே.வி.ஆனந்தின் தலைப்பு சென்டிமென்ட்!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

செய்திகள் 19-Oct-2016 5:59 PM IST VRC கருத்துக்கள்

‘அனேகன்’ படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கும் அடுத்த படத்தையும் ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் நிறுவனமே தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்சேதுபதியும், மடோனா செபாஸ்டியனும் கதாநாயகன் கதாநாயகியாக நடிக்கிறார்கள். பெயர் சூட்டாமலேயே படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த இப்படத்திற்கு இப்போது ‘கவண்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். ‘கவண்’ என்றால் தமிழ் இலக்கியத்தில் ‘கல்லெறியும் கருவி’ என அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ‘N’ என்ற ஆங்கில எழுத்தில் முடிவது போலவே படத்தின் தலைப்பை வைத்திருக்கிறார் கே.வி.ஆனந்த். ‘கனா கண்டேன்’, ‘அயன்’, ‘மாற்றான்’, ‘அனேகன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது ‘கவண்’ என்ற டைட்டிலை வைத்திருக்கிறார் கே.வி.ஆனந்த்.

‘காதலும் கடந்து போகும்’ படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்சேதுபதியும், மடோனா செபாஸ்டியனும்இணைந்து நடிக்கும் இப்படத்தில் டி.ராஜேந்தர் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதால் மீதியுள்ள பட வேலைகளை சீக்கிரமாக முடித்துவிட்டு இப்படத்தை டிசம்பரில் வெளிட, படக்குழுவினர் திட்டமிட்டு வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் முதன் முதலாக ‘ஹிப் பாப் தமிழா’ ஆதியுடன் கை கோர்த்துள்ளார் கே.வி.ஆனந்த். இப்படத்தின் திரைக்கதை வசனத்தை சுபா எழுத, அபிநந்தன் ஒளிப்பதிவு செய்கிறார்.

#VijaySethupathi #KVAnand #MadonnaSebastian #Kavan #AGSEntertainment #TRajendar #ArchanaKalpathi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கருப்பன் - மோஷன் போஸ்டர்


;