மாகாபாவின் ‘கடலை’க்கு கைகொடுக்கும் ‘ரெமோ’ நாயகன்!

‘கடலை’ படத்தின் டிரைலரை நாளை சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்

செய்திகள் 19-Oct-2016 11:35 AM IST Chandru கருத்துக்கள்

சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து சின்னத்திரையிலிருந்து பெரியதிரைக்கு வந்தவர் மாகாபா ஆனந்த். அதிலும் தனியார் தொலைக்காட்சியில் சிவகார்த்திகேயன் நடத்திக் கொண்டிருந்த ஷோவை அவருக்குப் பிறகு தொகுத்து வழங்கியவர் மாகாபாதான். அந்த நட்பு இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

‘வானவராயன் வல்லவராயன்’ படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமான மாகாபா தற்போது அட்டி, கடலை, பஞ்சுமிட்டாய், மாணிக் என நான்கு படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது ‘கடலை’. மாகாபாவிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் இப்படத்தை சகாயசுரேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலரை நாளை (அக்டோபர் 20) சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம்.

#Kadalai #MaKaPaAnand #Sivakarthikeyan #Remo #Atti #AishwaryaRajesh #SagayaSuresh #DreamFactory

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;