விரைவில் வருகிறார் கலெக்டர் நயன்தாரா!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நயன்தாரா!

செய்திகள் 19-Oct-2016 11:00 AM IST VRC கருத்துக்கள்

கார்த்தி, நயன்தாரா இணைந்து நடித்துள்ள ‘காஷ்மோரா’ தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்துடன் கோபி நாயனார் என்ற இயக்குனரின் இயக்கத்தில் ஒரு பெயரிடப்படாத படத்தில் நடித்து வந்தார் நயன்தாரா. இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது அனைத்தும் முடிந்துவிட்டது. வித்தியாசமான கதைகளையும், கேரக்டர்களையும் தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா, இப்படத்தில் மாவட்ட ஆட்சியராக (கலெக்டர்) நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பும் ராமநாதபுரத்தில் நடைபெற்றுள்ளது.

‘கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் கோட்பாடி ஜெ. ராஜேஷ் தயாரித்து வரும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா, தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் லால்குடி இளையராஜா என பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். வலுவான கதை களத்தை கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் நயன்தாராவுடன் ‘காக்கா முட்டை’யில் நடித்த விக்னேஷ், ரமேஷ், மற்றும் வேலு ராமமூர்த்தி, ஈ.ராமதாஸ் சுனுலட்சுமி, ராம்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவிருக்கிறது.

#Nayanthara #Kaashmora #GopiNainar #Kaththi #KotpadiJRajesh #KJRStudios #KadaladiTaluk #Ramdass #VelaRamamurthy #SunnuLakshmi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கத்திசண்டை - டிரைலர்


;