மீண்டும் விஜய் - அட்லி : உறுதிசெய்த ஸ்ரீதேனாண்டாள் பிக்சர்ஸ்!

‘தெறி’ படத்திற்குப் பிறகு அட்லி இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிக்கும் படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக உறுதியாகியுள்ளது

செய்திகள் 19-Oct-2016 11:03 AM IST Chandru கருத்துக்கள்

இந்த ஆண்டு வெளியான படங்களில் சூப்பர்ஸ்டாரின் ‘கபாலி’க்குப் பிறகு அதிக வசூல் செய்த படம் ‘தெறி’. இப்படத்தின் வெற்றிக்கூட்டணியான விஜய் & அட்லியை மீண்டும் இணைத்து ஸ்ரீ தேனாண்டாள் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய படம் ஒன்றை தயாரிக்கவிருப்பதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வமாக தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. இந்நிலையில் சமீபத்திய டிவி பேட்டி ஒன்றில் மேற்கண்ட தகவலை உறுதிசெய்துள்ளார் ஸ்ரீ தேனாண்டாள் பிக்சர்ஸ் தயாரிப்பாளரான முரளி ராமசாமியின் மனைவி ஹேமா ருக்மணி.

தற்போது பரதன் இயக்கத்தில் ‘பைரவா’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய், இப்படம் முடிவடைந்ததும் அட்லி இயக்கத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. தனது 100வது படமாக சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவிருக்கும் பிரம்மாண்ட படத்தை அடுத்து இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்குமாம்.

#Rajinikanth #Kabali #Vijay #Samantha #Theri #Atlee #SriThenandalFilms #Murali #Bairavaa #Bharathan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;