நவம்பரில் குவியும் தமிழ் படங்கள்!

நவம்பரில் ரிலீசுக்கு வரிசைகட்டி நிற்கும் தமிழ் படங்கள்!

செய்திகள் 19-Oct-2016 10:41 AM IST VRC கருத்துக்கள்

இந்த தீபாவளிக்கு காத்தியின் ‘காஷ்மோரா’, தனுஷின் ‘கொடி’, நதியா நடித்துள்ள ‘திரைக்கு வராத கதை’, மா.கா.பா.ஆனந்தின் ‘கடலை’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் தீபாவளி முடிந்ததும் அடுத்த மாதம் (நவம்பர்) வரிசையாக நிறைய தமிழ் படங்கள் ரிலீசாகவிருக்கிறது. அதில் ஏற்கெனவே ரிலீஸ் தேதி அறிவித்த வெங்கட் பிரபுவின் ‘சென்னை -28 இரண்டாம் பாகம்’ நவம்பர் 10-ஆம் தேதி வியாழக் கிழமை வெளியாகவிருக்கிறது. இதனை தொடர்ந்து மறு நாள் (நவம்பர் 11-ஆம் தேதி) வெள்ளிக்கிழமை ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘புரூஸ்லீ’, ஜெயராம் மகன் காளிதாஸ் நடித்துள்ள ‘மீன் குழம்பும் மண் பானையும்’ ஆகிய படங்கள் ரிலீசாகிறது. இதனை தொடர்ந்து அடுத்த வாரம் 18-ஆம் தேதி வெள்ளிக் கிழமை விஷாலின் ‘கத்திசண்டை’, விஜய் ஆண்டனி நடித்து வரும் ‘சைத்தான்’ ஆகிய படங்கள் வெளியாகவிருக்கிறது. இதனை தொடர்ந்து வரும் வாரத்தில் 25-ஆம் தேதி விக்ரம் பிரபுவின் ‘வீரசிவாஜி’, ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்கள் வெளியாக்விருக்கிறது. இந்த படங்களுடன் சி.வி.குமார் இயக்கி, தயாரித்து வரும் ‘மாயவன்’ திரைப்படமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்காப்படுகிறாது. இதில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘சைத்தான்’ தெலுங்கில் ‘பெத்தலுடு’ என்ற பெயரில் அதே தினம் வெளியாகவிருக்கிறது.

#Chennai600028II #VenkatPrabhu #GVPrakash #BruceLee #KaththiSandai #Vishal #VijayAntony #Saithan #VeeraSivai #KadavulIrukkanKumaru #Maayavan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஐங்கரன் ட்ரைலர்


;