கோவா சர்வதேச திரைப்பட விழாவில் சூர்யாவின் இரண்டு படங்கள்!

சூர்யாவின் 2டி நிறுவனத்திற்கு கிடைத்த கௌரவம்!

செய்திகள் 18-Oct-2016 5:59 PM IST VRC கருத்துக்கள்

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு சார்பில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக இவ்விழா கோவாவில் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழா அடுத்த மாதம் (நவம்பர்) நடைபெறவிருக்கிறது. இவ்விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்த இரண்டு படங்கள் தேர்வாகியுள்ளது. அந்த படங்கள் பாண்டிராஜ் இயக்கிய ‘பசங்க-2’, மற்றும் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘24’. இந்த படங்களுடன் சுதா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் நடித்த ‘இறுதிச்சுற்று’ படம் உட்பட வேறு சில தமிழ் படங்களும் திரையிட தேர்வாகியுள்ளது. சூர்யாவின் தயாரிப்பில் உருவாகிய இரண்டு படங்கள் ஒரே விழாவில் திரையிடப்படுவது, இந்நிறுவனத்திற்கு கிடைத்த மிக பெரிய கௌரவமாகும்.

#Suriya #2DEntertainment #Pasanga2 #24Movie #Samantha #VikramKumar #Pandiraj #IruthiSuttru #Madhavan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;