தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் உருவாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’

தமிழ், தெலுங்கு, ஹிந்தி பேச வரும் மோகன்லாலின் புலிமுருகன்!

செய்திகள் 18-Oct-2016 2:38 PM IST VRC கருத்துக்கள்

மோகன்லால் நடிப்பில் சென்ற 7-ஆம் தேதி ரிலீசாகி வசூலில் பெரும் சாதனைகள் படைத்து வரும் மலையாள படம் ‘புலிமுருகன்’. மலையாள சினிமாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகிய இப்படம் இந்திய அளவில் மட்டும் இதுவரை 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து மலையாள சினிமாவின் முந்தைய வசூல் சாதனைகளை எல்லாம் முறியடித்துள்ளது என்று மலையாள திரையுலகிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றது. அத்துடன் வெளிநாடுகளில் இன்னும் திரையிடப்படாத இப்படம் விரைவில் வெளிநாடுகளிலும் ரிலீசாகவிருப்பதால் வசூலில் ‘புலிமுருகன்’ மேலும் பல சாதனைகள் படைக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ப்ரியதர்சன் இயக்கத்தில் மோகன் லால் நடித்து வெளியான ‘ஒப்பம்’ படமும் வசூலில் பெரும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ‘புலிமுருகன்’ படத்தை இந்திய மொழிகளில் ரீ-மேக் செய்து தயாரிக்க, பலருக்கு இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் தயாரிக்கும் உரிமையை ரமேஷ் பி.பிள்ளையின் ‘அபிஷேக் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் கைபற்றியுள்ளது என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். ‘புலிமுருகன்’ ரீ-மேக்கில் ரமேஷ் பி.பிள்ளையுடன் மலையாள புலிமுருகனை தயாரித்த டோமிச்சனும் கை கோர்க்க இருக்கிறார்! மலையாள படத்தை விட மிக பிரம்மாண்மான முறையில் இப்படம் எடுக்கப்படவிருக்கிறது என்றும் அதற்காக முன்னணி நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைசாக் இயக்கத்தில் கேரளா, வியட்நாம், தாய்லாந்த் ஆகிய நாடுகளில் உருவான ‘புலிமுருகன்’ படத்தில் மோகன் லாலுடன் கமலினி முகர்ஜி, நமிதா ஆகியோர் நடிக்க, ஜெகபதிபாபு வில்லனாக நடித்திருக்கிறார். இப்படத்தில் ஹைலைட்டாக அமைந்த விஷயம், பீட்டர் ஹெய்ன் அமைத்த சண்டை காட்சிகளும், நிஜ புலியுடன் மோகன்லால் நேரடியாக மோதும் ஆக்ரோஷ காட்சிகளுமே!

#PuliMurugan #MohanLal #Vyshak #ThomichanMulakupaadam #MulagupaadamFilms #AbhishekFilms

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காப்பான் - டீஸர்


;