ஜி.வி.யின் ‘KIK’ இசை ட்ரீட் எப்போது?

ஜி.வி.யின் ‘KIK’ இசை ரிலீஸ் தேதி?

செய்திகள் 18-Oct-2016 12:48 PM IST VRC கருத்துக்கள்

எம்.ரஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, நிக்கி கல்ராணி முதலானோர் நடிக்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்து விடும் என்கிறார்கள். டி.சிவாவின் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் 19-வது தயாரிப்பான இப்படத்திற்கு கதாநாயகனாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷே இசை அமைக்கிறார். . சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலைலையில் இப்படத்தின் பாடல்களை அக்டோபர் 20-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். முதலில் இப்படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் திடீரென்று தீபாவளி ரிலீசில் இருந்து பின் வாங்கிய இப்படத்தை அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

#KadavulIrukkanKumaru #GVPrakash #PrakashRaj #NikkiGalrani #Anandhi #RJBalaji #KIK #MRajesh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;