புதிய டெக்னாலஜியில் ‘பாகுபலி 2’ டீஸர்!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் ‘பாகுபலி 2’ படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

செய்திகள் 18-Oct-2016 9:59 AM IST Chandru கருத்துக்கள்

600 கோடிக்கும் மேல் வசூல் மழை பொழிந்த ‘பாகுபலி’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அதன் 2ஆம் பாகம் இன்னும் பிரம்மாண்டமாய் உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட 1 வருடத்திற்கும் மேலாக நடந்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் ஏப்ரலில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் வியாபாரம் இப்போதே சூடுபிடித்துள்ளது. ‘பாகுபலி 2’ படத்தின் ஹிந்தி விநியோக உரிமையை கரண் ஜோஹர் மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கியிருக்கிறாராம். அதோடு அதன் சேனல் ரைட்ஸும் எந்த தென்னிந்திய படத்திற்கும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய விலையில் வாங்கப்பட்டிருக்கிறதாம்.

இந்நிலையில், இப்படம் குறித்த சந்தோஷ செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது. வரும் 20ஆம் தேதியிலிருந்து 27ஆம் தேதி வரை ‘ஜியோ மாமி 18வது மும்பை திரைப்பட விழா’வில் ‘பாகுபலி 2’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், மேக்கிங் வீடியோ, டீஸர், கிராபிக் நாவல் பிரிவியூ ஆகியவற்றை வெளியிடவிருக்கின்றனர். அக்டோபர் 22ஆம் தேதி மாலை 4 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெறவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, முதல்முறையாக 360 டிகிரி மேக்கிங் வீடியோவையும் வெளியிடுகிறார்கள். விர்ச்சுவல் ரியாலிட்டி என்றழைப்படும் விஆர் கண்ணாடிகளை அணிந்து பார்க்கும் வகையில் ‘பாகுபலி 2’ படத்தின் டீஸரையும் வெளியிடுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாஹோ டீஸர்


;