‘பூலோக’த்தைத் தொடர்ந்து மீண்டும் கிறிஸ்துமஸ் விருந்து படைக்கும் ஜெயம் ரவி!

ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா நடிப்பில் உருவாகிவரும் ‘போகன்’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

செய்திகள் 18-Oct-2016 9:54 AM IST Chandru கருத்துக்கள்

‘ரோமியோ ஜூலியட்’ லக்ஷ்மண் இயக்கத்தில் ‘தனி ஒருவன்’ அரவிந்த் சாமியுடன் இணைந்து ஜெயம் ரவி நடித்து வரும் ‘போகன்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் சமீபத்தில் முடிவடைந்தன. ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடிக்கும் இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. ஆயுதபூஜைக்கே வெளியாகும் என்று சொல்லப்பட்ட இப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை இப்போது படத்தின் நாயகன் ஜெயம் ரவி அறிவித்திருக்கிறார்.

சூர்யாவின் ‘சிங்கம் 3’ படம் வெளியாகும் (டிசம்பர் 16) மறுவாரமே ‘போகன்’ (டிசம்பர் 23) படம் வெளியாகவிருக்கிறதாம். கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி இதேபோல் கிறிஸ்துமஸ் வெளியீடாக ஜெயம் ரவியின் ‘பூலோகம்’ திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

#Bogan #JayamRavi #Hansika #ArvindSwamy #Lakshman #RomeoJuliet #Suriya #Singam3 #Bhooloham #Trisha

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;