இறுதிகட்ட பணிகளில் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’

திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடித்த ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படக்குழுவினர்

செய்திகள் 17-Oct-2016 4:40 PM IST VRC கருத்துக்கள்

‘2 MOVIE BUFF’ என்ற நிறுவனம் சார்பில் பி.எஸ்.ரகுநாதன் மற்றும் 'ACROSS FILMS' நிறுவனம் சார்பில் பிரபு வெங்கடாசலம் இணைந்து தயாரிக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. சுதர் இயக்கும் இப்படத்தில் கயல் சந்திரனும், ‘பிச்சைக்காரன்’ படப் புகழ் சாத்னா டைட்டஸும் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடியே வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் பிசியாகியுள்ள படக்குழுவினர், இப்படத்தை மிக விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு விறுவிறுப்பாக பணியாற்றி வருகிறார்கள். இசைக்கு அஷ்வத், ஒளிப்பதிவுக்கு மகேஷ், கலை இயக்கத்திற்கு ரம்யன் என கூட்டணி அமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னையிலேயே நடந்துள்ளது.

#ThittamPottuThiruduraKoottam #KayalChandran #SatnaTitus #ACROSSFILMS #VPrabhu #Pichaikkaran

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - டிரைலர்


;