‘காஷ்மோரா’, ‘கொடி’ படங்களுடன் தீபாவளி ரேஸில் குதிக்கும் ‘திரைக்கு வராத கதை’

கார்த்தி, தனுஷ் படங்களுடன் தீபாவளியில் களமிறங்கும் நதியா படம்!

செய்திகள் 17-Oct-2016 3:37 PM IST VRC கருத்துக்கள்

பிரம்மாண்டமான முறையில் உருவாகியிருக்கும் கார்த்தியின் ‘காஷ்மோரா’ தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘காஷ்மோரா’வுடன் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள ‘கொடி’யும் தீபாவளி வெளியீடாக வரவிருக்கிறது. கார்த்தியின் ‘காஷ்மோரா’, தனுஷின் ‘கொடி’ படங்களுடன் நதியா, இனியா, எடன், கோவை சரளா, ஆர்த்தி என முழுக்க முழுக்க பெண்களே நடித்திருக்கும் ‘திரைக்கு வராத கதை’ என்ற படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் என மலையாளத்தின் முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியிருக்கும் துளசி தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘திரைக்கு வராத கதை’ படத்தை ‘எம்.ஜே.டி.புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் மணிகண்டன் தயாரித்துள்ளார்.

#ThiraikkuVaratahKadhai #Kaashmora #Kodi #Nadhiya #Ineya #KovaiSarala #Karthi #Dhanush #TulasiDas

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெஹந்தி சர்க்கஸ் கோடி அருவி பாடல்


;