தயாரிப்பாளராக களமிறங்கும் இசை அமைப்பாளர்!

86 வயது சாருஹாசன் வில்லனாக நடிக்கும் படம்!

செய்திகள் 17-Oct-2016 3:23 PM IST VRC கருத்துக்கள்

ஜீவா நடித்த ‘ரௌத்திரம்’ மற்றும் ‘களம்’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த பிரகாஷ் நிக்கி தயாரிப்பாளராக களமிறங்குகிறார். ‘பீக்காக் ஃபிலிம் ஃபேக்டரி’ என்ற பட நிறுவனம் சார்பாக இவர் தயாரிக்கும் படத்தில் 86 வயதுடைய சாருஹாசன் வில்லனாக, அதாவது பிரவுன் சுகர் போன்ற போதை பொருட்கள் கடத்தும் கும்பல் தலைவனாக நடிக்கிறாராம்! விஜய்ஸ்ரீ என்பவர் இயக்கும் இப்படம் நிகழ்காலத்தில் நடக்கும் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலை அப்படியே பிரதிபலிக்கும் கதையாம்! ‘சூதுகவ்வும்’ படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ராஜா இப்படத்தின் ஒளிப்பதிவு பணியை கவனிக்க, எடிட்டர் லெனின் உதவியாளர் சுதா படத்தொகுப்பு வேலையை மேற்கொள்கிறார். வித்தியாசமான கதை என்பதால் தான் இப்படத்தை தயாரிக்க முன வந்தாராம் பிரகாஷ் நிக்கி. சாமி இயக்கும் அடுத்த படத்திற்கு இசை அமைக்கவிருக்கிறார் பிரகாஷ் நிக்கி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;