விஷ்ணு விஷாலுடன் மீண்டும் இணையும் ஆனந்தராஜ்!

விஷ்ணு விஷால் தயாரிப்பில் ஆனந்தராஜ்!

செய்திகள் 17-Oct-2016 2:28 PM IST VRC கருத்துக்கள்

விஷ்ணு விஷால் தயாரிப்பாளராக களமிறங்கிய படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’. எழில் இயக்கிய இப்படம் 50 நாட்கள் ஓடி வெற்றிப் படமாக அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து தனது ‘வி.வி.புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக ஒரு படத்தை துவங்கியுள்ளார் விஷ்ணுவிஷால். இப்படத்தின் பூஜை சென்ற மாதம் நடந்தது. அறிமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் கதாநாயகியாக கேத்ரின் தெரெசா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் இப்படத்திற்கு ‘முண்டாசுப்பட்டி’ படத்திற்கு இசை அமைத்த ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார் என்றும் செய்தியை வெளியிட்டிருதோம். இந்நிலையில் இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் ‘முண்டாசுப்பட்டி’யில் இணைந்து நடித்த ஆனந்தராஜும் ஒரு முக்கியமான கேரட்கரில் நடிக்கிறார் என்பதை விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உறுதிப்படுத்தியுள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘மாவீரன் கிட்டு’ திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிரபார்க்கப்படுகிறது.

#AnandRaj #VishnuVishal #VVProductions #Muruganandham #CatherineTresa #SeanRolden #Mundasupatti

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அருவம் ட்ரைலர்


;