‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநயகனாக நடிக்கும் படம் ‘மீண்டும் வா அருகில் வா’. மேலும் இப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக ஆரவ் நடிக்கிறார். கதாநாயகியாக சாரா தேவா நடிக்கிறார். ‘லிபி சினி கிராஃப்ட்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் வி.என்.ரஞ்சித் குமார் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜெய ராஜேந்திர சோழன் இயக்குகிறார்.
‘‘ஒரு மனநல மருத்துவரால் எந்த அளவிற்கு இயல்பியல் சக்திகளோடும் இயற்கையை கடந்த பாத்திரங்களோடும் நிகராக நின்று செயல்பட முடிகிறது என்பதையும், எப்படி இளம் பெண்கள் மாய வலையில் சிக்கி காணாமல் போகிறார்கள் என்பதையும் நிமிடத்திற்கு நிமிடம் திகிலூட்டும் விதமான காட்சி அமைப்புகளுடன் படமாக்கப்பட்டுள்ள படம் இது என்பதுடன் இப்படத்தில் ஒரு புதிய முயற்சியையும் கையாண்டுள்ளோம். அது என்ன என்பது சஸ்பென்ஸ்’’ என்கிறார் இயக்குனர் ஜெயராஜேந்திர சோழன்! இறுதிகட்ட பணிகளில் இருந்து வரும் இப்படத்தின் ஒளிப்பதிவை கே.பி.பிரபு கவனிக்க, விவேக், ஜேஷ்வந்த் என இருவர் இணைந்து இசை அமைக்கிறார்கள். இப்படம் விரைவில் திரைக்கு வருமாம்.
#SanthoshPrasad #MeendumVaaArigilVaa #Aarav #SaaraDeva #VNRanjithKumar #JayaRajendraChozhan
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ படத்தில் ஒரு சிறிய...
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் முதலிடத்தைக் கைப்பற்றி தமிழக ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப்...
மோகன்ராஜா இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி கதாநாயகனாக நடித்து அறிமுகமான படம் ‘ஜெயம்’. இந்த படம் 2003, ஜூன்...