பெரிய தொகைக்கு விற்கப்பட்ட ரம்!

‘ரெமோ’வை தொடர்ந்து அனிருத்தின் ‘ரம்’

செய்திகள் 17-Oct-2016 11:08 AM IST VRC கருத்துக்கள்

‘வேலையில்லா பட்டதாரி’ பட புகழ் ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், விவேக், நரேன் முதலானோர் நடிக்கும் ‘ரம்’ படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விட்டு ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தை ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் விஜயே ரகவேந்திரா தயாரித்து வருகிறார். அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்கத்தில் உருவாகி வரும் ஹாரர் படமான இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறர். அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் ‘ஹோலா அமிகோ’ என்ற பாடலும் ‘ஃபியோஃபோபிலியா’ என்ற பாடலும் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. விரைவில் ரிலீசாகவிருக்கும் ‘ரம்’ படத்தின் தமிழக விநியோக உரிமையை ஏ.பி.ஸ்ரீகாந்தின் ‘ஸ்ரீ சாய் சர்க்யூட் 6000’ நிறுவனம் மிகப் பெரியை ஒரு தொகைக்கு கைபற்றியிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 20 ஆண்டு காலமாக திரைப்பட விநியோகத்தில் இருந்து வரும் நிறுவனம் இது. ‘ரெமோ’வின் வெற்றியை தொடர்ந்து அனிருத் இசையில் வெளியாகவிருக்கும் படம் ‘ரம்’ என்பது குறிப்பிடத்தக்கது.

#Rum #APSrikanth #HolaAmigo #Hrishikesh #SanchitaShetty #MiyaGeorge #Narain #Vivek #Peiyophobilia

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் -டீஸர்


;