எல்லோருக்கும் லாபம் தந்த ‘ரெமோ’ - ஆர்.டி.ராஜா உற்சாகம்

Following ‘Remo’ success, interesting updates on Sivakarthikeyan’s next directed by Mohan Raja has been unveiled.

செய்திகள் 17-Oct-2016 10:41 AM IST Chandru கருத்துக்கள்

‘24 ஏஎம் ஸ்டியோஸ்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகி அக்டோபர் 7ஆம் தேதி வெளியான படம் ‘ரெமோ’. சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்க, பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பிருந்ததாலும், வரிசையாக 6 நாட்கள் விடுமுறை தினமாக அமைந்துவிட்டதாலும் முன்கூட்டியே கணித்தபடி இப்படம் பெரிய அளவில் வசூலை குவித்து வருகிறது.

இத்தனைக்கும் இப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் இருவேறாக கருத்துக்கள் நிலவி வந்தபோதும்கூட, குடும்பத்துடன் இப்படம் பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுப்பதால் வசூல் குறையவில்லை என்று கூறப்படுகிறது. இப்படத்தின் வெற்றி குறித்து ‘தியேட்டர் ரவுண்ட்’ செய்து வருகிறது ‘ரெமோ’ டீம். இதுபற்றிய ட்வீட் செய்துள்ள தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, ‘‘அனைத்து விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், கேன்டீன், பார்க்கிங் கான்ட்ராக்டர்கள் என எல்லோருக்கும் மிகப்பெரிய லாபத்தை கொடுத்திருப்பதாக தியேட்டர் ரவுன்ட் செய்தபோது தெரியவந்துள்ளது. மிக்க மகிழ்ச்சி!’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘ரெமோ’ படம் வெளியாகி 10 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் 35 கோடிக்கு மேல் வசூலாகியிருப்பதாக கூறப்படுகிறது.

#24AMStudios #SivaKarthikeyan #KeerthiSuresh #Anirudh #RDRaja #Sathish #Saranya #Remo #MohanRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;