‘புரூஸ்லீ’ ஆடியோ மற்றும் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு!

அடுத்தடுத்து வரும் ஜி.வி.யின் இரண்டு படங்கள்!

செய்திகள் 17-Oct-2016 10:28 AM IST VRC கருத்துக்கள்

‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் ‘புரூஸ்லீ’யின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து விட்டு இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இயக்குனர் பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி வரும் இப்படத்தின் பாடல்களை வருகிற 21-ஆம் தேதியும், டிரைலரை தீபாவளியன்றும் வெளியிடவிருக்கிறார்கள். அதனை தொடர்ந்து சென்சாருக்கு செல்லும் இப்படத்தை அடுத்த (நவம்பர்) மாதம் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்யவும் முடிவு செயதிருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். வேதாளம், தில்லுக்கு துட்டு, ஹலோ நான் பேய் பேசுறேன் மற்றும் பல படங்களை கோவையில் விநியோகம் செய்த ‘ஆர்ட் ஃபேக்டரி’ செந்தில் ‘புரூஸ்லீ’யின் மொத்த தமிழக உரிமைய வாங்கி, வேலவா எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் சார்பில் வெளியிடுகிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கீர்த்தி கார்பண்டா கதாநாயகியாக நடித்துள்ளார். மொட்டை ராஜேந்திரன் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ளார். எம்.ராஜேஷ் இயக்கத்தில், டி.சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘கடவுள் இருக்கான் குமாரு’ படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

#BruceLee #GVPrakash #KenanyaFilms #PrashanthPandiaraj #ArtMediaSenthil #Vedalam #DhillukkuDhuttu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;