மீண்டும் இணையும் ‘இருமுகன்’ டீம்?

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் மீண்டும் விக்ரம்?

செய்திகள் 17-Oct-2016 10:20 AM IST VRC கருத்துக்கள்

விக்ரம் இரண்டு வேடங்களில் நடித்து சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘இருமுகன்’. ஆனந்த் சங்கர் இயக்கிய இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இணையவிருக்கிறார்கள் விக்ரமும், ஆனந்த் சங்கரும் என்று கூறப்படுகிறது. இப்படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார் என்றும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கும் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இப்போது சூர்யா நடிப்பில் ‘சிங்கம்-3’, ‘ தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் என மூன்று படங்களை தயாரித்து வருகிறது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் ‘சாமி-2’வின் படப்பிடிப்பு ஆனந்த் சங்கர், விக்ரம் மீண்டும் இணையும் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகே துவங்கும் என்கிறார்கள்.

#ChiyaanVikram #Hari #Saamy2 #IruMugan #AnandShankar #Nayanthara #Don’tBreathe #Vikram

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

S3 - டீசர்


;