தற்போது ஹரி இயக்கத்தில் ‘சிங்கம் 3’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் சூர்யா. இறுதிக்கட்ட வேலைகளிலிருக்கும் இப்படம் டிசம்பர் 16ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடிக்கிறார் சூர்யா. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூழலில், தற்போது படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நவம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#KeerthySuresh #RajiniMurugan #Remo #Vijay #Bairavaa #Suriya #ThaanaSerndhaKoottam #VigneshSivan
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...
‘K-13’ படத்தை தொடர்ந்து அருள்நிதி, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் 90-வது படமாக உருவாகி வரும்...