விஜய்சேதுபதியுடன் இணையும் சிம்பு பட நாயகி!

கீர்த்தி சுரேஷ் இல்லையாம், மஞ்சிமா மோகனாம்!

செய்திகள் 15-Oct-2016 2:48 PM IST VRC கருத்துக்கள்

‘தர்மதுரை’, ‘ஆண்டவன் கட்டனை’ ‘றெக்க’ என வரிசையாக வெற்றிப் படங்களை தந்த விஜய்சேதுபதி அடுத்து ‘ரேனிகுண்டா’ படத்தை இயக்கிய பன்னீர் செல்வம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்றும் ஒரு சில நாட்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால் இப்படத்தில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லையாம். மாறாக சிம்புவின் ’அச்சம் என்பது மடமையடா’ பட நாயகியான மஞ்சிமா மோகன் தேர்வாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘அச்சம் என்பது மடமையடா’ பட வேலைகள் பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில மஞ்சிமா மோகன் தற்போது விக்ரம் பிரபுவுடன் ‘முடிசூடா மன்னன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் கௌதம் மேனன் இயக்கியுள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#VijaySethupathi #ManjimaMohan #Rekka #Dharmadurai #AandavanKattalai #Renigunta #PanneerSelvam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;