‘யாருக்கும் அடங்காத ஓநாய், மிஷ்கின்’ – இயக்குனர் ரஞ்சித்

சினிமாவில் நான் பார்த்த ஒரு ஆணழகன் ராம்! - மிஷ்கின்

செய்திகள் 15-Oct-2016 1:12 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் ராம், பூர்ணா கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, மிஷ்கின் வில்லனாக நடித்துள்ள படம் ‘சவரக்கத்தி’. ’லோன் உல்ஃப் புரொடக்‌ஷன்’ நிறுவனம் சார்பில் மிஷ்கின் தயாரித்துள்ள இப்படத்தை மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவரும் மிஷ்கினின் தம்பியுமான ஜி.ஆர்.ஆதித்யா இயக்கியுள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. அப்போது ‘கபாலி’ பட இயக்குனர் ரஞ்சித் பேசும்போது,
‘‘மிஷ்கினை பற்றி ஒரு வார்த்தையில் சொல்வதென்றால் அவர் யாருக்கும் அடங்காத ஒரு ஓநாய்! அவரது ஒவ்வொரு படைப்பு வித்தியாசமாக இருக்கும்’’ என்றார்.

அதனை தொடர்ந்து இயக்குனர் கே.பாக்யராஜ் பேசும்போது, ‘‘சாதாரண ஒரு நடிகரை வைத்து படம் இயக்குவதே கஷ்டம்!. இதில் ராம், மிஷ்கின் என இரண்டு யானைகளை கட்டி மேய்த்திருக்கிறார் இயக்குனர் ஆதித்யா! இப்படம் அவருக்கு சவாலான ஒரு படமாக இருந்திருக்கும்’’ என்றார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் இயக்குனர் ராம் பேசும்போது, ‘‘குங்ஃபூ கற்றுக்கொண்ட ஒரு குங்ஃபூ பாண்டே மிஷ்கின்! சீரியஸான படங்கள் பண்ணி வருகிற மிஷ்கின் எழுதியிருக்கும் ஒரு ஹிலாரியஸ் ஸ்கிரிப்ட் இந்த ‘சவர்க்கத்தி’. காமெடி படம் என்றாலும் இதிலும் மிஷ்கினோட சீரியஸ் டச்சஸ் இருக்கிறது’’ என்றார்.

மிஷ்கின் பேசும்போது, ‘‘என்னோட ஐந்து வயதில் பார்த்த ஒரு சவரக்காரனோட கதை தான் இந்த ‘சவரக்கத்தி’. சலூன் கடையை பொறுத்தவரை யு.எஸ்., சிங்கப்பூர் என்று உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் ஒரே மாதிரிதான்! இந்த கதையை எழுதி முடித்தப்போது இதில் வரும் கதாநாயகன் பாத்திரத்திற்கு என் மனதில் முதலில் வந்தவர் இயக்குனர் ராம் தான்! தமிழ் சினிமாவில் நான் பார்த்தவர்களின் அழகான ஒரு ஆம்பளை ராம்! அதனால அவரை நடிக்க வைத்திருக்கிறேன். காலை 6 மணி முதல் மாலை 6 மணிக்குள் நடக்கிற ஒரு கதை தான் இப்படம். பொய்யே வாழ்க்கையாக கொண்ட கேரக்டர் ராமுடையது. எப்போதுமே வயிற்றில் குழந்தையை சுமந்துகொண்டிருக்கிற ஒரு கேரக்டர் பூர்ணா ஏற்றிருக்கும் சுபத்ரா! நான் ரௌடியாக நடித்திருக்கிறேன். இந்த மூன்று கேரக்டர்களை சுற்றி நடக்கும் கதை தான் படம்! எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக ஒரு அருமையான பாமாக இதனை இயக்கியிருக்கிரார் என் தம்பி ஆதித்யா! உங்கள் எல்லோருக்கும் இப்ப்டம் பிடிக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார்.

இப்படத்திற்கு அரோல் கரோலி இசை அமைத்திருக்கிறார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை ஜூலியன் கவனிக்க, கலை இயக்கத்தை சதீஷ் கவனித்துள்ளார். இப்படத்தை மிக விரைவில் ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள்.

#Savarakathi #GRAdithya #Mysskin #Ranjith #Ram #Sasi #BalajiSakthivel #Bhagyaraj #Naaser

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;