ஆஸ்னாவைத் தொடர்ந்து சந்தானத்துக்கு 2வது முறை ஜோடியாகும் நாயகி!

சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் நாயகி வைபவி ஷந்தில்யா மீண்டும் ஒரு படத்தில் சந்தானத்துக்கு நாயகியாகிறார்

செய்திகள் 15-Oct-2016 12:35 PM IST Chandru கருத்துக்கள்

சந்தானம் நாயகனாக அறிமுகமான ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் நாயகியாக நடித்த ஆஸ்னா சவேரி, அதனைத் தொடர்ந்து வெளியான சந்தானத்தின் ‘இனிமே இப்படித்தான்’ படத்திலும் நாயகியாகத் தொடர்ந்தார். இரண்டு படங்களுமே சந்தானத்திற்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்த ‘தில்லுக்கு துட்டு’ படமும் கலெக்ஷனில் கலக்கியது.

தற்போது தான் நடிக்கும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தைத் தொடர்ந்து விடிவி கணேஷ் தயாரிக்கும் புதிய படமொன்றில் நாயாகனாக நடிக்கிறார் சந்தானம். இப்படத்திலும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நடித்த வைபவி ஷந்தில்யாவையே தனக்கு ஜோடியாக்கியிருக்கிறார் சந்தானம். ஃபேமிலி என்டர்டெயினராக உருவாக உள்ள இப்படத்தில் சம்பத், விடிவி கணேஷ், ரோபோ ஷங்கர் உட்பட பலரும் நடிக்கிறார்கள்.

#Santhanam #VallavanukkuPullumAayudham #InimeyIppadithan #AshnaSaveri #ServarSundaram #VaibhaviShandilya #VTVGanesh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;