யுவனின் அடுத்தடுத்த ஆல்பம் : ரசிகர்கள் உற்சாகம்!

யுவன் ஷங்கர் ராஜா முழுவீச்சில் இசையமைக்கத் தொடங்கியுள்ளதால் அவரின் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்

செய்திகள் 15-Oct-2016 12:29 PM IST Chandru கருத்துக்கள்

பெர்சனல் விஷங்கள் காரணமாக சிறிது காலம் திரையுலகை விட்டு விலகியிருந்த யுவன் ஷங்கர் ராஜா கடந்த வருடத்திலிருந்து மீண்டும் இசையமைக்கத் தொடங்கினார். இதனால் அவரின் ரசிகர்கள் மீண்டும் உற்சாகத்திற்குத் திரும்பினர். தற்போது யுவனின் அடுத்தடுத்த ஆல்பங்கள் வெளியாகி வருவதால், ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலைக்குச் சென்றுள்ளனர்.

வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சென்னை 28’ படத்தின் இரண்டாம் பாகத்தின் ஆல்பம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படத்தில் இடம்பெறும் ‘சொப்பன சுந்தரி’ பாடல் ஏற்கெனவே வைரல் ஹிட்டாகியுள்ளது. அதோடு, கிருஷ்ணா, சுவாதி நடிக்கும் ‘யாக்கை’ படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைக்கிறார். இந்த ஆல்பமும் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. விரைவில் செல்வராகவன் இயக்கி வரும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ஆல்பமும் வெளியாக உள்ளது. இதற்கும் யுவன்தான் இசையமைக்கிறார்.

இந்த படங்கள் இல்லாமல் தற்போது ‘ஜாக்சன் துரை’ தரணிதரன் இயக்கத்தில் ‘மெட்ரோ’ நாயகன் ஸ்ரிஷ் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கவும் யுவன் துப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இது இல்லாமல் மேலும் சில படங்களுக்கு இசையமைக்கவும் யுவனின் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.

#YuvanShankarRaja #Yaakkai #Chennai600028 #VenkatPrabhu #Swathi #Krishna #NaanIniKaatril #JacksonDurai #DharaniDharan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;