படப்பிடிப்பு துவங்கியது ‘நாகேஷ் திரையரங்கம்’

பூஜையுடன் துவங்கியது நாகேஷ் திரையரங்கம்!

செய்திகள் 14-Oct-2016 4:17 PM IST VRC கருத்துக்கள்

ஆரி, ஆஷ்னா சவேரி கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் படம் ‘நாகேஷ் திரையரங்கம்’. ட்ரான்ஸ் இண்டியா மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. ‘அகடம்’ என்ற திரைப்படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுத்து கின்னஸில் இடம் பெற்ற இயக்குனரான இசாக் ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தின் கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார். இப்படம் குறித்து இசாக் கூறும்போது,
‘‘திரையரங்கை மையப்படுத்தி உருவாக்கும் இப்படத்தின் கதையும், களமும் புதிதாக இருக்கும். நகைச்சுவை, காதல், மர்மம் போன்றவற்றை பின்னணியாக கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமாக விளங்கிய நடிகர் நாகேஷ். அவரது பெயரில் ஒரு திரையரங்கமும் இயங்கி வந்தது. அந்த பெயரில் உருவாகும் இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்’’ என்றார்.

இப்படத்தில் ஒரு இடைவெளிக்கு பிறகு நடிகைகள் லதா, சித்தாரா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், மும்பை மாடல் அழகி மாஷு ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவு பணியை ரமணா கவனிக்க, கலை இயக்குனராக ராமலிங்கம் பணியாற்றுகிறார். ஸ்ரீ இசை அமைக்கிறார்.

#NageshThiraiarangam #Aari #AshnaSaveri #Ishaq #Agadam #Bhanupriya #KaaliVenkat #Ramalingam #Sri

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலே வெள்ளையத் தேவா - டீசர்


;