Direction : Lakshmy Ramakrishnan
Production : Tag Entertainment
Starring : Lakshmy Ramakrishnan, Subbalakshmi, Nithin Sathya
Music : K
Cinematography : Imran Ahmedh K. R.
Editing : K. R. Rejith
‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’ ஆகிய படங்களை இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் மூன்றாவது படமாக வந்திருக்கும் ‘அம்மணி’ என்ன சொல்ல வருகிறாள்?
வியாசர்பாடி குடிசை பகுதியில் வசிக்கும் சாலம்மா (லட்சுமி ராமகிருஷ்ணன்) அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார். கணவர் இறந்த காரணத்தால் செவலியர் வேலை கிடைக்கும் சாலம்மாவுக்கு ஆட்டோ ஓட்டும் நிதின் சத்யா, குடிப்பழக்கம் கொண்ட செல்வம், ரௌடியை திருமணம் செய்துகொண்ட மகள் என மூன்று பிள்ளைகள்! சாலம்மா வீட்டில் குடும்பத்தினரால் கைவிடப்பட்டு குப்பை பொறுக்கி பிழைப்பு நடத்தும் அம்மணி என்ற பாட்டியும் வசித்து வருகிறார். சாலம்மாவுக்கு மூன்று பிள்ளைகளாலும் எப்போதும் பிரச்சனைகளே தவிர அவர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை! இந்நிலையில் சாலம்மா ஓய்வு பெற இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில், சாலம்மா பெயரில் இருக்கும் வீட்டை நிதின் சத்யா சாமர்த்தியமாக எழுதி வாங்கிவிட்டு, சாலம்மாவையும் மற்றவர்களையும் நடுத்தெருவுக்கு கொண்டு சென்று விடுகிறார். இதனால் பெரிதும் மனம் உடையும் சாலம்மா, ஒரு முடிவு எடுக்கிறார்! அந்த முடிவு என்ன? அவர்களது வாழ்க்கையில் அம்மணி பாட்டியின் பங்கு என்ன? இதற்கு விளக்கம் தரும் படமே ‘அம்மணி’.
கணவனை இழந்த காரணத்தால் குடும்ப சுமையை ஏற்க நேரிடும் ஒரு பெண்மணி, வசதியான குடும்பத்தினரால் கைவிடப்படும் ஒரு பெண்மணி என இரண்டு பெண்மணிகளின் கதைகளை ஒரே புள்ளியில் முடிகிற விதமாக இப்படத்தின் திரைக்கதையை வித்தியாசமாக அமைத்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். அந்த திரைக்கதையை 92 நிமிடங்களே ஓடும் விதமாக யதார்த்தமான காட்சி அமைப்புகளுடனும், வசனங்களுடனும் படமாக்கியுள்ளார். முதல் பாதியில் வரும் சில நாடகத்தன்மையான காட்சிகளை தவிர்த்திருந்தால் ‘அம்மணி’ இன்னும் அதிகளவில் ரசிகர்களால் கவரப்பட்டிருப்பார்.
இயல்பான காட்சிகளுக்கும் கதையோட்டத்திற்கும் ஏற்றபடி அமைந்திருக்கிறது ‘கே’யின் இசை! அதேபோல் இம்ரான் ஹமத்.கே.ஆரின் ஒளிப்பதிவும். எந்தவொரு கமர்ஷியல் விஷயங்களுக்கும் இடம்தராமல் கதையுடன் மட்டுமே பயணித்திருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனின் துணிச்சலை பாராட்டலாம். இந்த படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெறுமோ, இல்லையோ விருதுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
இப்படத்தின் இயக்குனர் என்றில்லாமல் சாலம்மா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் ஒரு சிறந்த நடிகை என்பதையும் நிரூபித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். மக்களால் கைவிடப்படும் பெற்றோர்களின் வலியை, சங்கடங்களை அப்படியே பிரதிபலித்திருக்கிறார் ‘அம்மிணி’ பாட்டியாக வரும் சுப்புலட்சுமி! அதைப் போல சொத்துக்காக பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் துன்பங்களை மட்டுமே கொடுக்கும் ஒரு மகனின் கேரக்டரை நிதின் சத்யா அழகாக பிரதிபலித்திருக்கிறார். குடிக்கார மகனாக வரும் செல்வம், மருமகள்களாக வரும் ரேணுகா, எஸ்.அன்னம் ஆகியோரின் பங்களிப்பும் யதார்த்தம்.
தமிழ் சினிமாவில் ‘ஆரோகணம்’ படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கிய லட்சுமி ராமகிருஷ்ணனின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த ‘அம்மணி’ அவருக்கு புகழ் மகுடம் சூட்டும் படமாக அமைந்துள்ளது.
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...
மாறுபட்ட கதைகளை, கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் பரத் அடுத்து நடிக்கும் படம் ‘லாஸ்ட் 6...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....