விஷாலின் ‘கத்திசண்டை’யில் அதிரடி சேஸிங் காட்சிகள்!

சென்னை ஈ.சி.ஆர.ரோட்டில் விஷாலின் ‘கத்திசண்டை’

செய்திகள் 14-Oct-2016 10:56 AM IST VRC கருத்துக்கள்

‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த ‘மெட்ராஸ் என்டர்பிரைசஸ்’ எஸ்.நந்தகோபால் தற்போது தயாரித்து வரும் படங்கள் ‘வீரசிவாஜி’ மற்றும் ‘கத்திசண்டை’. இதில் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘வீரசிவாஜி’ விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து இப்பொது ‘கத்திசண்டை’யின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் வடிவேலு, சூரி, ஜெகபதிபாபு, சௌந்தர் ராஜன், மதன் பாப, தருண் அரோரா, ஜெயபிரகாஷ், சின்னி ஜெயந்த், நிரோஷா, ஆர்த்தி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் இப்படத்திற்காக சேஸிங் காட்சி ஒன்று சென்னை ஈ.சி.ஆர்.ரோட்டில படமாக்கப்பட்டது. வில்லன்கள் ஜெகபதி பாபு, தருண் அரோரா ஆகியோரை விஷால் துரத்தி பிடிக்கும் கார் சேஸிங் மற்றும் பைக் சேசிங் காட்சிகள் 7 நாட்கள் 12 கேமராக்கள் கொண்டு பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது. பைக் ரேஸிங்கில் தேர்ச்சி பெற்ற ஆறு கலைஞர்கள் கொண்டு த்ரில்லிங்காக படமாக்கப்பட்ட இந்த காட்அசிகள் படத்தில் ஹைலைட்டாக இருக்கும் என்கின்றனர். சுராஜ் இயக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்ட் எம்.நாதன் கவனிக்க, ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைக்கிறார்.

#Vishal #KaththiSandai #Suraj #Tamannaah #Vadivelu #Soori #JagapathiBabu #TarunArora #HipHopThamizha

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;