தனுஷ் பாடலைக் கலாய்த்த யுவன், செல்வா!

செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திற்காக யுவன் இசையில் தனுஷ் பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார்.

செய்திகள் 14-Oct-2016 10:40 AM IST Chandru கருத்துக்கள்

செல்வராகவன் இயக்கத்த்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கெஸன்ட்ரா, நந்திதா ஆகியோர் நடிக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஹாரர் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமக்கிறார். அவரின் இசையில் தனுஷ் பாடிய பாடல் ஒன்றின் ஒலிப்பதிவு நேற்று நடைபெற்றது. இதுகுறித்த புகைப்படம் ஒன்றை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கீபோர்டு வாசித்துக்கொண்டே தனுஷ் பாட, அதைக்கேட்ட யுவன் காதைப்பொத்த, அண்ணன் செல்வராகவன் தலையில் கைவைக்க என அந்த புகைப்படத்தில் அத்தனை ஜாலியான விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போட்டோ ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த செல்வராகவனின் ‘புதுப்பேட்டை’ படத்திற்காக யுவன் இசையில் தனுஷ் ‘எங்க ஏரியா உள்ள வராதே....’ பாடலைப் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

#Dhanush #NenjamMarapathillai #Selvaraghavan #YuvanShankarRaja #Nandita #ReginaCassendra #SJSuriya

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;