விஜய்யின் ‘பைரவா’வில் நடிக்க ஆரம்பத்தில் ‘றெக்க’ நாயகி லக்ஷ்மிமேனனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், ஒருசில காரணங்களால் அவரால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. ஆனால், இப்போது ‘றெக்க’ பட நடிகை இன்னொருவருக்கு அந்த வாய்ப்பு உருவாகியிருக்கிறது. ஆம்... ‘றெக்க’ படத்தில் விஜய்சேதுபதி ‘மாலாக்கா...’ என்றழைத்த நடிகை சிஜா ரோஸுக்குதான் விஜய் படத்தில் நடிக்கும் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. இப்படத்தில் அவர் ஹரிஷ் உத்தமனுக்கு ஜோடியாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
பரதன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை பின்னி மில்லில் நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
#Vijay #Bairavaa #SijaRose #Rekka #LakshmiMenon #Bharathan #HarishUthaman #AzhagiyaTamizhMagan #VijayaProductions #KeerthySuresh
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...
‘K-13’ படத்தை தொடர்ந்து அருள்நிதி, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் 90-வது படமாக உருவாகி வரும்...