நவம்பரில் மீண்டும் களமிறங்கும் ‘ரெமோ’ டீம்!

ஆர்.டி.ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த பட ஷூட்டிங் நவம்பரில் துவங்குகிறது

செய்திகள் 14-Oct-2016 9:49 AM IST Chandru கருத்துக்கள்

பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகி, இருவேறு விமர்சனங்களை சந்தித்து, எதிர்பார்த்ததைவிட பெரிய அளவில் வசூலை குவித்துக் கொண்டிருக்கும் ‘ரெமோ’ பட டீம் தற்போது தங்களின் அடுத்த புரொக்ஜெட்டில் களமிறங்கவிருக்கிறது. ‘24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ ஆர்.டி.ராஜா தயாரிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கவிருக்கும் இப்படத்தின் அறிவிப் இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளியாகியிருந்தது. ஆனால், ‘ரெமோ’ வெற்றிவிழாவில் பேசிய சிவகார்த்திகேயன், தன்னையும், ஆர்.டி.ராஜாவையும் வேலை செய்யவிடாமல் சிலர் தடுப்பதாக குற்றம் சாட்டினார். அவரின் கண்கலங்கிய அந்த பேச்சிற்குப் பிறகு, மோகன் ராஜாவின் புரொஜெக்ட் தள்ளிப்போகலாம் என்றொரு பேச்சு மீடியாவில் அடிபட்டது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நவம்பர் 11ஆம் தேதி முதல் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது என தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார். ரோகிணி, சினேகா, பிரகாஷ் ராஜ், ஆர்.ஜே.பாலாஜி உட்பட பலரும் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

#Remo #SivaKarthikeyan #24AMStudios #RDRaja #Nayanthara #FaahadFaazil #MohanRaja #ThaniOruvan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;