யுவன் இசையில், ’யாக்கை’ பாடல்களை வெளியிட்டார் விஷ்ணுவர்தன்!

‘யாக்கை’ என்றால் என்ன? விளக்கம் தந்த இயக்குனர்!

செய்திகள் 13-Oct-2016 1:15 PM IST VRC கருத்துக்கள்

‘ஆண்மை தவறேல்’ படத்தை இயக்கிய குழந்தை வேலப்பன் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் ‘யாக்கை’. கிருஷ்ணா, ஸ்வாதி ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. பாடல் சி.டி.யைஅ அகிருஷ்ணாவின் அண்ணனும், இயக்குனருமான விஷ்ணுவர்தன் வெளியிட்டார்.

இப்படம் குறித்து இயக்குனர் குழந்தை வேலப்பன் கூறும்போது, ‘‘யாக்கை என்றால் என்ன? என்று நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள்! யாக்கை என்றால் உடல் என்று பொருள்! அன்பால், இயற்கையால் உருவாகும் ஒரு உடலுக்குள் கெமிக்கல், விஷம் போன்ற பொருட்கள் கலந்தால் என்ன ஆகும் என்ற கருவை வைத்து இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறோம். இப்படம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் நல்ல ஒரு கருத்தை கூறும் படமாக இருக்கும்’’ என்றார்.

’பிரிம் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் முத்துக்குமரன் தயாரித்துள்ள இப்படத்தில் கிருஷ்ணா, ஸ்வாதியுடன் ‘ஜோக்கர்’ பட புகழ் குரு சோமசுந்தரம் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ராதாரவி, மாரிமுத்து, சிங்கம் புலி, மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர், ‘கபாலி’யில் ஜானி கேரக்டரில் நடித்த ஹரி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை சத்யா பொன்மார் கவனித்திருக்க, படத்தொகுப்பை சாபு ஜோசஃப் கவனிக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

#Yaakkai #Krishna #Swathi #PrakashRaj #YuvanShankarRaja #Vishnuvardhan #KulandaiVelappan #GuruSomasundaram #YaakkaiAudioLaunch

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;