மலையாள ரீ-மேக்கில் லட்சுமி ராய், நிகிஷா பட்டேல்!

மீண்டும் மலையாள படத்தை ரீ-மேக் செய்யும் மித்ரன் ஆர். ஜவஹர்

செய்திகள் 13-Oct-2016 12:27 PM IST VRC கருத்துக்கள்

மலையாள ‘தட்டத்தின் மறையத்து’ படத்தை தமிழில் ’மீண்டும் ஒரு காதல் கதை’யாக ரீ-மேக் செய்து இயக்கிய மித்ரன் ஆர். ஜவஹர் அடுத்து மற்றுமொரு மலையாள படத்தை தமிழில் ரீ-மேக் செய்து இயக்குகிறார். ஸ்வேதா மேனன், பாவனா, மேக்னா ராஜ், அனன்யா, ஹரிதா என ஐந்து ஹீரோயின்கள் நடித்த ’100 Degree Celsius’ என்ற படம் தான் அது. ஐந்து பெண்களுக்கு இடையில் நடக்கும கதையை கொண்ட இப்படத்தில் ராய் லட்சுமி, நிகிஷா பட்டேல் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். மற்றவர்களின் தேர்வு நடந்து வருகிறது. இந்த படம் தமிழ, தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவிருக்கிறது என்றும் இப்படம் சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும என்றும் கூறப்படுகிறது.

#MithranJawahar #MeendumOruKadhalKadhai #SwethaMenon #Bhavana #RaaiLaxmi #NikeshaPatel #100DegreeCelsius

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயா 2 - ட்ரைலர்


;