நீண்டநாட்களாக உருவாகி வந்தாலும், சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்காக ரசிகர்கள் பொறுமையாக காத்திருக்கிறார்கள். அதற்கு இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘தள்ளிப்போகாதே...’ பாடலும் ஒரு காரணம். அதோடு, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படக்கூட்டணியின் அடுத்த படைப்பு என்பதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் எப்போதோ முடிந்துவிட்டபோதும், ‘தள்ளிப்போகாதே....’ பாடலுக்கான படப்பிடிப்பு மட்டும் சிற்சில காரணங்களால் தள்ளிக்கொண்டே இருந்தது. அதையும் தற்போது வெற்றிகரமாக படமாக்கிவிட்டார்கள். இப்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் படம் நவம்பர் மாத இறுதியில், அதாவது 18 அல்லது 25ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#STR #GauthamVaudevMenon #AchchamYenbadhuMadamaiyada #ManjimaMohan #BabaSehgal #DanielBalaji #ARRahman
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள்...