4 மில்லியனை எட்டிய ‘காஷ்மோரா’ டிரைலர்!

4 மில்லியனை எட்டிய ‘காஷ்மோரா’ டிரைலர்!

செய்திகள் 13-Oct-2016 11:00 AM IST Chandru கருத்துக்கள்

ஒரு பிரம்மாண்டமான படைப்பிற்கு ரசிகர்களிடமிருந்து பிரம்மாண்டமான வரவேற்பு கிடைக்கும்போதுதான், அதில் உழைத்தவர்களின் வியர்வைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். அந்தவகையில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் மிகஅதிக பொருட்செலவில் தயாரித்துள்ள ‘காஷ்மோரா’ படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்தைவிட எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. கோகுல் இயக்கத்தில் கார்த்தி வித்தியாசமான கெட்அப்புடன் நடித்துள்ள இந்த காமெடி ஹாரர் வரலாற்றுப் படத்தின் டிரைலர் கடந்த 7ஆம் தேதி வெளியானது.

டிரைலர் வெளியான முதல் 17 மணி நேரத்திலேயே 10 லட்சம் பார்வையிடல்களை கடந்து சானை புரிந்துள்ள ‘காஷ்மோரா’, தற்போது ஒரு வாரத்திற்குள்ளாகவே 40 லட்சம் பார்வையிடல்களை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. கார்த்தி பட டிரைலரிலேயே மிக அதிகபட்ச பார்வையிடல்களைப் பெற்ற டிரைலாக ‘காஷ்மோரா’ அமைந்துள்ளது.

நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உட்பட பலரும் நடித்துள்ள காஷ்மோரா திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உலகமெங்கும் ரிலீஸாகிறது.#Kaashmora #Karthi #Nayanthara #SriDivya #DreamWarriorPictures #SanthoshNarayanan #Gokul #Vivek

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;