‘இருமுகன்’ படத்தை தொடர்ந்து தேவி!

நல்ல வசூல் செய்து வரும் தேவி!

செய்திகள் 12-Oct-2016 3:14 PM IST VRC கருத்துக்கள்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா ஜோடியாக நடித்து கடந்த 7-ஆம் தேதி வெளியான படம் ‘தேவி’. சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ விஜய் சேதுபதியின் ‘றெக்க’ ஆகிய படங்களுடன் களம் இறங்கிய ‘தேவி’க்கு விமர்சன ரீதியாக நல்ல பாராட்டுக்கள் கிடைத்திருப்பதோடு, வசூல் ரீதியாகவும் இப்படம் வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக ‘தேவி’ படக் குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இயக்குனர் ஏ.எல்.விஜய் பேசும்போது,

‘‘ரெமோ’, ‘றெக்க’ படங்களுடன் ’தேவி’யும் வெளியானது. அந்த படங்களுடன் ‘தேவி’க்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இது நாங்கள் எதிர்பார்த்த வெற்றிதான்! சமீபகாலமாக நான் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் ரிதியாகவும் நிறைய தோல்விகளை தான் சந்தித்திருக்கிறேன். இந்நிலையில் ‘தேவி’ என் வாழ்க்கையில் இப்போது மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தந்துள்ளது. இந்த வெற்றிக்கு என் கூட ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி’’ என்றார்.

பிரபு தேவா பேசும்போது, ‘‘தேவி’ இவ்வளவு பெரிய வெற்றி அடைந்ததற்கு உங்கள் ஆத்மார்த்தமான எழுத்துக்களும் ஒரு முக்கிய காரணம். அனைவருக்கும் நன்றி’’ என்றார்.
‘தேவி’யை தமிழகமெங்கும் வெளியிட்ட ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் பேசும்போது, ‘‘தேவி’யை முதலில் 190 தியேட்டர்களில் தான் வெளியிட்டோம். ஆனால் படம் வெளியான தினத்திலிருந்து நல்ல ரிப்போர்ட் வந்து கொண்டிருப்பதால் இப்போது மேலும் 75 தியேட்டர்களில் திரையிட ஏற்பாடு செய்துள்ளோம். இந்த படம் தனித்து வெளியாகியிருந்தால் ‘பிச்சைக்காரன்’, ‘அப்பா’ போன்ற படங்களை போன்று வசூலில் மிகப் பெரிய சாதனை படைத்திருக்கும். பெரும் வெற்றி பெற்ற ‘இருமுகன்’ படத்தை தொடர்ந்து ’தேவி’யும் எங்கள் ‘ஆரா சினிமாஸு’க்கு வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இந்த வெற்றிக்கு வாய்ப்பு தந்த இயக்குனர் விஜய், பிரபுதேவா, ஐசரி கணேஷ் ஆகியோருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவி 2 டீஸர்


;